சட்டப்படி செல்லத்தக்க ஓர்ஒப்பந்தத்தில் இருக்கவேண்டியமுக்கிய அம்சங்கள் :இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின்பிரிவு 10 பின்வருமாறுகூறுகிறது:All agreements arecontracts if they aremade by the free consent(பரிபூரண -முழுமையானசம்மதம்) of the partiescompetent to contract, for a lawfulConsideration and with alawful Object and are nothereby expressly declaredto be void"1. Agreement : உடன்படிக்கை (Agreement)மற்றும் ஒப்பந்தம் (Contract) :பிரிவு 2(h) : இந்த பிரிவுஒப்பந்தம் என்ற சொல்லைவரையறுக்கிறது. ஒப்பந்தம்என்றால் என்ன?பிரிவு 2(h) இன்படி " ஒப்பந்தம்என்பது, சட்டத்தினால்செயல்படுத்தக்கூடிய ஓர்உடன்படிக்கை ஆகும். (Contract is an agreementenforceable by law)அப்படியென்றால்"உடன்படிக்கை - Agreement- என்பது என்ன?பிரிவு 2(e) "உடன்படிக்கை "என்ற சொல்லைவரையறுக்கிறது.எனவே அனைத்துஉடன்படிக்கைகளும் "ஒப்பந்தம்" அல்ல. ஆனால் அனைத்துஒப்பந்தங்களும் உடன்படிக்கைதான்.(All Agreements are notcontracts But all Contractsare agreements)2.Free Consent : ஒப்பந்தம்செய்துகொள்ளும் நபர்கள் ,முழுமையான சம்மதத்தின்அடிப்படையில் ஒப்பந்தத்தைசெய்துகொள்ள வேண்டும்.இந்தசம்மதமும் FREE ஆக இருக்கவேண்டும்.- அதாவது-வேறுயாராலும் வற்புறுத்திப்பெறப்பட்டதாகவோ பிறரால்அச்சுறுத்தப்பட்டுபெறப்பட்டதாகவோஇருக்கக்கூடாது.3.Competency - ஒப்பந்தம்செய்துகொள்ள சில தகுதிகள்அவசியம்.உதாரணமாக 18வயது நிறையாத மைனருடன்செய்துகொள்ளும் ஒப்பந்தம்செல்லாது.முட்டாள்கள்,மனனிலை சரியற்றவர்கள்போன்றவர்களுடன்செய்துகொள்ளும் ஒபந்தங்களும்செல்லாது.4.Lawful consideration :consideration என்பதைபிரதிபலன் என்றுகூறலாம்.ஒப்பந்தத்தின்படி நாம்ஒருவருக்கு ஒரு வேலையைசெய்துகொடுக்கிறோம் அல்லது அல்லதுசெய்யாமல் இருக்கிறோம்என்றால் அதற்குக் கைம்மாறாகஅவர் நமக்கு கொடுப்பதைconsiderationஎன்கிறோம்.இந்த கைம்மாறுசட்டப்படி செல்லக்கூடியதாகஇருக்கவேண்டும்.உதாரணமாகநான் உங்களுக்கு பத்துமூட்டை அரிசி தருகிறேன்என்றால் நீங்கள் எனக்குஆயிரம் ரூபாய் தரமுன்வந்தால்அது நியாயம்.ஆனால்அதற்காக வேறு ஒரு நபரைஅடித்து கைகால்களை வெட்டவேண்டும் என்றால் அதுசெல்லாது.5.Lawful Object :ஒப்பந்தத்தின் நோக்கம்இதுதான்.ஒப்பந்தத்தின்நோக்கமும் சட்டப்படிசெல்லத்தக்கதாகஇருக்கவேண்டும்.சட்டத்துக்குப் புறம்பானசெயல்கள் ஒப்பந்தத்தின்நோக்கமாக இருக்கக் கூடாது.6.Not declared to be void: இந்தியாவில் நடைமுறையில்இருக்கும் சட்டம் எதுவும் உங்கள் ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்காமல் இருக்கவேண்டும்.